நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியலில் ஈடுபடுவார் என எதிர் பார்க்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன்பே இதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினார். மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து கருத்துக்களும் கேட்டார். எல்லோரும் ஒட்டு மொத்தமாக அரசியல் கட்சி துவங்க வேண்டும் என வற்புறுத்தினர். இதையடுத்து விஜய் துவக்கிய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் திடீரென முடிவை மாற்றிக் கொண்டார். அ.தி.மு.க.வுக்கு மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததோடு ஒதுங்கிக் கொண்டார். ஆனால் இருதினங்களுக்கு முன் சாலி கிராமத்தில் உள்ள விஜய் வீடு கல்வீசி தாக்கப்பட்டது. அவர் படுக்கை அறையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. அப்போது விஜய் வீட்டில் இல்லை. கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். விஜய் வீட்டில் கல்வீசப்பட்ட தகவல் தமிழகம் முழுவதும் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் கடிதம் மூலமாகவும், போனிலும் வற்புறுத்தி வருகின்றனர். கல்வீச்சு சம்பவத்தை எப்படி எதிர் கொள்வது என நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
0 comments:
Post a Comment